Skip to main content

Posts

Showing posts from February, 2020

பேருந்து பயணம்

பயணம் - ஒவ்வொரு மனிதனுக்கும் பிடித்த ஒரு செயல். சாலை வழி பயணம் / சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். நம் அன்றாட வாழ்வில் இருந்து ஒரு இடைவேளை எடுத்து இவ்வாறு செல்லும் பயணம் மகிழ்ச்சியாக அமைய ஏராளமான திட்டமிடுகிறோம். இவ்வாறான பயணத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது பொது போக்குவரத்து. சாதாரண உள்ளூர் பேருந்து தொடங்கி ஆடம்பரமான சொகுசு பேருந்துகள் வரை ஏதேனும் ஒன்றில் நாம் பயணிக்கிறோம். அவ்வாறான ஒரு பேருந்து பயணத்தை பற்றி தான் இப்பதிவு. கோவையில் இருந்து மூணார் செல்லும் புதிய அரசு பேருந்து அது. 7 மணி நேரப் பயணம். அனுபவம் மிகுந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர். சுமார் நான்கைந்து வருடங்களாக இருவரும் ஒரே தடத்தில் பணி புரிகின்றனர். உடன் பிறந்த சகோதரர்களையும் மிஞ்சும் வகையில் ஒருவர் மீது ஒருவருக்கு பாசம். தாங்கள் இருவரும் மக்களுக்கு நேரடியாக தங்கள் சேவைகளை வழங்குவதாக எண்ணுகிறார்கள். இருவரும் தன் அலைபேசியை ஓட்டுநர் அருகில் உள்ள பெட்டியில் போட்டுக் கொள்கிறார்கள். பயணத்தின் போது அலைபேசியை பயன்படுத்துவதில்லை. பொது போக்குவரத்து என்பதை உணர்ந்து அவர்கள், பேருந்தில் குப்பைகள் இட வேண்டாம் என்று