Skip to main content

Posts

Showing posts from November, 2019

எங்கே சென்றது பாட்டி சொன்ன கதைகள்?

அம்புலியும் உறங்க செல்லும் ஓர் நிசப்தமான இரவுப் பொழுதில், உறங்க மறுத்து அழ ஆரம்பித்தாள் அந்த சுட்டி குழந்தை. செய்வதறியாது மகளை தன் தோளில் போட்டுக் கொண்டு வீட்டினுள் அங்கும் இங்கும் நடந்த தந்தை தனக்கு தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார். பலன் இல்லை! அன்று இரவு உருண்டோடியது. அடுத்த நாள் மாலையிலேயே தந்தைக்கு சிறிய சஞ்சலம் துவங்கியது. இன்றிரவை எவ்வாறு கழிப்பது என்று! குழந்தையின் அழுகை அவர் மனதில் கனத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய எண்ண அலைகளை அசைபோட்டுக் கொண்டே வாகனத்தை இயக்கி வீட்டை அடைந்த அவருக்கு, தன் பாட்டி கூறிய காவியக் கதைகள் நினைவிற்கு வந்தது. இன்றிரவு எப்படியும் இக்கதைகளை கூறி குழந்தையை உறங்க வைத்து விடலாம் என்று நிம்மதியாக இருந்தார். இரவும் வந்தது, தான் கேட்ட கதைகளை பகிரவும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிறு பிள்ளையாகவே மாறி கதையை கூற ஆரம்பித்த தந்தைக்கு அதிர்ச்சி. "2k Kids" தலைமுறையான அச்சிறுமிக்கு காவியங்கள் புரியவில்லை. "சின்சாங், சோட்டா பீம்" என்று பார்க்கும் அக்குழந்தைக்கு "ஒரு ஊரில் ஒரு அரசர், ஒரு ஊரில் ஒரு பாட்டி" போன்ற கதைகள் சுவாரசியமாக இல்லை. ச...